நச்சு வாயு பாதிப்பைத் தடுக்கும் அதிநவீன அமோனியா சென்சார் தொழில்நுட்பத்தை பெங்களூரு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெங்களூரு நானோ, மென் பொருட்கள் அறிவியல் மைய விஞ்ஞானிகள், அறை வெப்பநிலையில் இயங்கக்கூடிய அமோனியா வாயு கண்டறியும் சென்சார் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். உர உற்பத்தி, குளிர்சாதன வசதி, வேதிப்பொருள் உற்பத்தித் துறைகளில் அமோனியா பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது தற்செயலாகக் கசிந்தால் கண் எரிச்சல், சுவாசப் பாதிப்புகள் போன்ற தீவிர உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வனேடியம் ஆக்சைடு – வனேடியம் சல்பைடு கலப்பு கட்டமைப்பின் அடிப்படையில் இந்த அதிநவீன சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் அங்கப்பனே சுப்பிரமணியன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இந்தத் தொழில்நுட்பத்தை எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மாதிரிகளாக மாற்றியுள்ளனர். இந்த சென்சார் மிகக் குறைந்த அளவிலான நச்சு வாயுவைக்கூட துல்லியமாகக் கண்டறிந்து, சுற்றுச்சூழல் நிலவரத்தைப் பாதுகாப்பானது, எச்சரிக்கை, ஆபத்தானது என வகைப்படுத்தி உடனடியாக எச்சரிக்கை அளிக்கும். இது வெளிப்புற மின்சார ஆதாரமின்றி தானியங்கி முறையில் இயங்கும் வசதி கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *